×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 61 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடத்தி வழங்கல்

நாகப்பட்டினம், மார்ச் 4: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 61 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணி தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நேற்று நடந்தது. காடம்பாடி நகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்த முகாமில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத தலைவர் கௌதமன், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதேபோல் வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் முகாமை தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராம புறங்களில் 49 ஆயிரத்து 772 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 11 ஆயிரத்து 846 குழந்தைகள் என 61 ஆயிரத்து 618 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அனைத்து சுற்றுலாத்தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் நாகூர் ஆண்டவர் தர்கா வேளாங்கண்ணி வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் 61 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடத்தி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,NAGAPATTINAM ,Kadampadi ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...